அவசரகால சட்டத்துக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள அவசரகால ஒழுங்கு விதிகளை சவாலுக்கு உட்படுத்தி உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனு இன்று (29) உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மனுத்தாக்கல்
மனு தொடர்பான வர்த்தமானியை வலுவிழக்க செய்வதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரான சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளமையால், அரசமைப்பில் உறுதி செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளது என மனுவின் ஊடாக சற்குணநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.
உயர்நீதிமன்றத்திடம் விடுக்கப்பட்ட கோரிக்கை
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வழுவிழக்க செய்து உத்தரவிடுமாறு மனுதாரர் உயர்நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
குறித்த மனுவில் பிரதிவாதிகளாக ஜனாதிபதி சார்பில் சட்டமா அதிபர், முன்னாள் ஜனாதிபதி செயலாளர் காமினி செனரத் உட்பட பலரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.
தனது சட்டத்தரணியின் பெயரை மறந்த சந்தேகநபருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு |