தனது சட்டத்தரணியின் பெயரை மறந்த சந்தேகநபருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
நீதிமன்றில் தனது சட்டத்தரணியின் பெயரை மறந்த காரணமாக சந்தேக நபர் ஒருவருக்கு இரண்டு மாத கால விளக்க மறியல் உத்தரவை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமால் ரணராஜா பிறப்பித்துள்ளார்.
நேற்றைய தினம் இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது சந்தேக நபரின் சார்பில் சட்டத்தரணி ஒருவர் நீதிமன்றில் முன்னிலையாகாத காரணத்தினால், அவரது சட்டத்தரணி யார் என நீதிபதி விசாரித்துள்ளார்.
விசாரணைகள்
சட்டத்தரணியின் பெயரை தெரிந்து கொண்டு விசாரணைகளை ஒத்தி வைக்கும் நோக்கிலே நீதிபதி இவ்வாறு விசாரித்துள்ளார்.
எவ்வாறெனினும், சட்டத்தரணியின் பெயர் நினைவில் இல்லை என சந்தேக நபர் கூறியதனால், குறித்த நபரை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 29ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
சட்டத்தரணியின் பெயரை நினைவுபடுத்திக் கொள்ள இவ்வாறு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வெள்ளவத்தையில் சகோதரிகளுக்கு நேர்ந்த கோர சம்பவம் - ஒருவர் பலி |