இலங்கை கடற்பரப்பில் தீவிபத்துக்குள்ளான கப்பல்! - உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு
இலங்கை கடலில் எம்.வி எக்ஸ்-பிரஸ் பேர்ல் என்ற கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்தக் கோரி உயர்நீதி மன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் நீதி மையமும், ஒரு மீனவர் குழுவும் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளன.
இந்த கப்பல் இலங்கை கடலுக்குள் எவ்வாறு பிரவேசித்தது என்பது குறித்து முறையான விசாரணை நடத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று இந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.
இதேவேளை கொழும்பு கடலில் மூழ்கியுள்ள இந்த கப்பல் குறித்து குற்றவியல் புலனாய்வுத் துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.
குற்றவியல் புலனாய்வுத் துறையின் உறுப்பினர்கள் இன்று கப்பல் மூழ்கிக்கொண்டிருக்கும் இடத்துக்கு சென்று திரும்பியுள்ளனர்.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 6 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam
