நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வாகன இறக்குமதிக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக 227 பிராடோ எஸ்யூவிகளை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகளுக்கு எதிராக அடுத்த வாரம் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவுள்ளதாக தேசிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.
ஜே.வி.பியின் மேல் மாகாண முன்னாள் சபை உறுப்பினர் சுனில் வட்டகல இதனை செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் தெரிவித்துள்ளார்.
வாகன இறக்குமதிக்கான கடன் கடிதங்கள் அமைச்சரவை ஒப்புதல் இல்லாமல் திறக்கப்பட்டுள்ளதாகவும், அது சட்டவிரோதமானது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அமைச்சரவை அறிக்கை மே 18 அன்று சமர்ப்பிக்கப்பட்டது. எனினும் திறைசேரியின் ஊடாக கடன் கடிதங்கள் மக்கள் வங்கியில் ஏப்ரல் 22 அன்று திறக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மே 18 அன்று அமைச்சரவை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது, எனினும் அது மே 24 அன்று நடந்த அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் நிராகரிக்கப்பட்டது. இருப்பினும், அமைச்சரவை பேச்சாளர், கெஹெலிய ரம்புக்வெல்ல, கடன் கடிதங்கள் ஏற்கனவே திறக்கப்பட்டுள்ளன.இப்போது அவற்றை நிறுத்தி வைக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் வாகன இறக்குமதியை ரத்து செய்ய உத்தரவு கோரி தேசிய மக்கள் சக்தி அடுத்த வாரம் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யும் என்று வட்டகல தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை ஒப்புதல் இல்லாமல் கடன் கடிதங்கள் திறக்கப்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது என்பது தொடர்பிலும், கோவிட் தடுப்பூசிகள் நாட்டிற்கு அவசியமாக தேவைப்பட்டபோது மற்றும் விவசாயத்துக்கு பசளைகள் இல்லாத போது அதனைக்கொள்வனவு செய்யாமல் வாகனங்களை இறக்குமதி செய்வது பொது நிதிக் கோட்பாட்டின் மீறலாகும்.
பொது நிதிக் கோட்பாட்டின் படி, அரசாங்கம் நாட்டின்
உரிமையாளர்கள் அல்ல. பாதுகாவலர்கள் மட்டுமே. எப்பாவல பொசுபேட் வழக்கு மற்றும்
சேனாரத் Vs சந்திரிகா குமாரதுங்க போன்ற பல வழக்குகளில் அரசாங்கம் ஒரு
பாதுகாவலர் மட்டுமே என்றும் அதிகாரத்தை தவறாக பயன்படுத்த முடியாது என்றும்
நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது என்பதை .ஜே வி.பியின் மேல் மாகாண சபை முன்னாள்
உறுப்பினர் சுனில் வட்டகல தெரிவித்தார்.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 6 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
