முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் 2021ஆம் ஆண்டு எந்தவொரு நியாயமான காரணமும் இல்லாமல் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை 2026 மார்ச் 25 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த மனு இன்று(02.10.2025) உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகளான ஷிரான் குணரத்ன, அச்சல வெங்கப்புலி மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய மூவர் கொண்ட நீதிபதிகள் அமர்வு முன் விசாரணைக்கு வந்த நிலையிலேயே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில், எந்தவொரு நியாயமான காரணமும் இல்லாமல் குற்றப் புலனாய்வுத் துறையால் (CID) சட்டவிரோதமாகக் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டதன் மூலம் தனது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக அறிவிக்கக் கோரி, முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இந்த அடிப்படை உரிமைகள் மனுவைத் தாக்கல் செய்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





விமானத்தில் கலாட்டா செய்த பிரித்தானியரை காதைப் பிடித்து இழுத்துச் சென்ற பிரான்ஸ் பொலிசார்: ஒரு வைரல் வீடியோ News Lankasri
