ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாச ராஜபக்சவிற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாச ராஜபக்ச தேர்தல் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதைத் தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 24 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவரும், பதில் பொதுச் செயலாளருமான அமைச்சர் விஜயதாச ராஜபக்ச மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சாரதி துஷ்மந்த ஆகியோர், அந்தப் பதவிகளில் பணியாற்றவும் தேர்தல் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதைத் தடுப்பதற்காகவும் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 24 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேலதிக மாவட்ட நீதிபதி சந்திம எதிரிமன்ன இன்று இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
தற்காலிக தலைமைச்
தற்காலிக தலைமைச் செயலாளர் மற்றும் செயல் தலைவரின் முடிவுகளை நடைமுறைபடுத்துவதற்கு தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு மீண்டும் இன்று நீட்டிக்கப்பட்டது.
அத்துடன் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 24 ஆம் திகதியன்று பாதுகாப்பு தரப்பு ஆட்சேபனைகளை சமர்ப்பிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளரும் இராஜாங்க அமைச்சருமான லசந்த அழகியவண்ண, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க மற்றும் சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவரும் விவசாய அமைச்சருமான மகிந்த அமரவீர ஆகியோர் தாக்கல் செய்த வழக்கு இன்று பரிசீலிக்கப்பட்டபோது இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





தந்திரமாக வேலை செய்து காய் நகர்த்திய குணசேகரன், சந்தோஷத்தில் அறிவுக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri

தயவுசெய்து இந்த சீரியலை முடித்துவிடுங்கள், கதறும் சன் டிவி சீரியல் ரசிகர்கள்... அப்படி என்ன தொடர் Cineulagam

10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri
