நாமலுக்கு எதிரான வழக்கு.. நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மற்றும் அவர் உள்ளிட்ட பிரதிவாதிகள் குழுவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை எதிர்வரும் ஜனவரி 29ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாமல் ராஜபக்ச முன்னதாக சட்டவிரோதமாக சம்பாதித்த 15 மில்லியன் பணத்தை என்.ஆர். கன்சல்டன்சி என்ற நிறுவனத்தில் முதலீடு செய்தமை தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது.
இந்த முறைப்பாடு இன்று (07) கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி ஜெயதுங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
விசாரணை
அதன்போது, நாமல் ராஜபக்சவும் சந்தேக நபர்களும் நீதிமன்றத்தில் முன்னிலையான நிலையில், இந்த விசாரணை தொடர்பாக சட்டமா அதிபரிடமிருந்து இன்னும் அறிவுறுத்தல்கள் கிடைக்கவில்லை என்று குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தது.
அதனை தொடர்ந்து, வழக்கை ஜனவரி 29ஆம் திகதி மீண்டும் விசாரிக்க உத்தரவிட்ட நீதவான், சட்டமா அதிபரின் அறிவுறுத்தல்கள் குறித்து நினைவூட்டல்களை அனுப்பவும் உத்தரவிட்டார்.
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது, நாமல் ராஜபக்ச உட்பட நான்கு பிரதிவாதிகளுக்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் இந்தப் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஐ.நா ஒப்பாரி மண்டப நாட்டாமைக்கு ஈழத் தமிழரின் கடிதம் 13 மணி நேரம் முன்

ஈஸ்வரி குறித்து கொற்றவையிடம் தர்ஷினி கூறிய உண்மை, ஷாக்கான தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
