தீவிரவாத ஒடுக்குமுறை மற்றும் புலனாய்வு பிரிவிற்கு விசாரணைக்கு வருமாறு பீற்றர் இளஞ்செழியனுக்கு அழைப்பு
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரும் சமூக செயற்பாட்டாளருமாகிய பீற்றர் இளஞ்செழியனுக்கு கிளிநொச்சி தீவிரவாத தடுப்பு மற்றும் புலனாய்வு பிரிவிற்கு விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இன்று (04.08.2021) முல்லைத்தீவு – மணற்குடியிருப்பில் அமைந்திருக்கின்ற அவருடைய வீட்டிற்குச் சென்ற சிவில் உடையில் வருகை தந்த நபர் பொலிஸார் எனத் தன்னை குறிப்பிட்டு கிளிநொச்சியில் அமைந்துள்ள தீவிரவாத ஒடுக்குமுறை மற்றும் புலனாய்வு பிரிவிற்குச் செல்லுமாறு குறித்த கடிதத்தைக் கையளித்துச் சென்றுள்ளனர்.
குறித்த கடிதத்தில் பீற்றர் இளஞ்செழியனை 06.08.2021 அன்று காலை 11 மணிக்குக் கிளிநொச்சி தீவிரவாத ஒடுக்குமுறை மற்றும் புலனாய்வு பிரிவினால்
மேற்கொள்ளப்படும் விசாரணையில் வாக்குமூலம் ஒன்றினை பெறுவதுக்காக வருகை தருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.


செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 12 மணி நேரம் முன்

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri
