சிவனொளிபாதமலைக்கு யாத்திரை சென்ற நபருக்கு நேர்ந்த கதி!
சிவனொளிபாதமலைக்குத் தரிசனம் செய்ய வந்த யாத்திரிகர் ஒருவர், மலை ஏறும் வழியில் திடீரென ஏற்பட்ட சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
நேற்று(30.03.2026) முற்பகல் 11:30 மணியளவில் இந்தச் சோகச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கொழும்பு, தெஹிவளைப் பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய சம்பத் பெர்னாந்து என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அடுத்த 5 மாதத்திற்கு கட்டாய நடைமுறை! அரச ஊழியர் முதல் பொது மக்கள் வரை அனைவருக்கும் முக்கிய அறிவுறுத்தல்
39 வயது நபர் உயிரிழப்பு
தனது உறவினர்களுடன் சிவனொளிபாதமலைக்குத் தரிசனம் செய்ய வந்த இவர், கங்குலதென்ன பகுதியில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது திடீரென சுகவீனமடைந்துள்ளார்.

இதனையடுத்து, உறவினர்கள் மற்றும் கங்குலதென்ன பொலிஸாரின் உதவியுடன் அவர் உடனடியாக நல்லதண்ணி நகருக்குத் தூக்கி வரப்பட்டுள்ளார்.
அங்கிருந்து உடனடியாக அம்புலன்ஸ் மூலம் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார். எனினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னரே அவர் உயிரிழந்துவிட்டார் என்று மஸ்கெலியா மாவட்ட வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் தற்போது மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
அமெரிக்காவால் ஈரானில் ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா..! 21 மணி நேரம் முன்
Tamizha Tamizha: காதலித்த கணவருக்கு கண்முன் நடந்த இரண்டாவது திருமணம்! 14 ஆண்டுகளாக குறையாத காதல் Manithan