அதிகாலையில் பலத்த பாதுகாப்புடன் நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட மிதிகம சூட்டி
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் உறுப்பினரும், சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பின் தீவிர உறுப்பினருமான, மிதிகம சூட்டி என்றழைக்கப்படும் ராஜபக்ச பாதிரனலகே பிரபாத் மதுசங்க நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
அவர், இன்று காலை சிறப்பு பொலிஸ் அதிகாரிகள் குழுவினரால் ஓமானிலிருந்து தீவிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
சொகுசு விடுதி
கொலை, கொள்ளை, துப்பாக்கிகளை வைத்திருத்தல் மற்றும் நாட்டில் போதைப்பொருள் கடத்தல் ஆகிய குற்றச்சாட்டுகளுக்காக இலங்கையின் பல நீதிமன்றங்களில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மிதிகம சூட்டியைக் கைது செய்வதற்காக இலங்கை பாதுகாப்புப் படைகள் சர்வதேச சிவப்பு அறிவிப்பை வெளியிட்டிருந்த நிலையில், ஓமானில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் தங்கியிருந்தபோது அவர் நாட்டின் பாதுகாப்புப் படைகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவால் ஈரானில் ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா..! 23 மணி நேரம் முன்
வெளியே போக சொன்ன சேது, அதிர்ச்சி முடிவு எடுத்த தமிழ்ச்செல்வி... சின்ன மருமகள் சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam