முக்கிய தொழில் நிறுவனங்கள் மீது ஈரான் தாக்குதல்: உலகளவில் எரிசக்தி விலை உயரும் அபாயம்
அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் ஐந்தாவது வாரமாக நீடித்து வரும் நிலையில், வளைகுடா நாடுகளில் உள்ள முக்கிய தொழில்முறை உள்கட்டமைப்புகள் மீது ஈரான் நடத்திய தாக்குதல்கள் உலகளாவிய கவலையை ஏற்படுத்தியுள்ளன.
ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் உள்ள முன்னணி அலுமினிய உற்பத்தி ஆலையான 'எமிரேட்ஸ் குளோபல் அலுமினியம்' மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளதோடு, ஆலைக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
அதேபோல், பஹ்ரைனில் உள்ள உலகின் மிகப்பெரிய அலுமினிய உருக்காலைகளில் ஒன்றான 'அலுமினியம் பஹ்ரைன்' நிறுவனத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இரு ஊழியர்கள் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் ஆதரவு
இந்தச் சூழலில், ஈரானின் ஆதரவு பெற்ற ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சனிக்கிழமை முதல் இந்தப் போரில் நேரடியாகப் பங்கேற்றுள்ளதால் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

இஸ்ரேலின் முக்கிய இராணுவ இலக்குகளை நோக்கி ஏவுகணைகளை ஏவியுள்ளதாக அறிவித்துள்ள ஹவுதிகள், செங்கடல் பகுதியில் கப்பல் போக்குவரத்தை இலக்கு வைத்தால் உலகப் பொருளாதாரம் பெரும் பாதிப்பைச் சந்திக்கும் என அஞ்சப்படுகிறது.
எரிசக்தி விலையேற்றம்
ஏற்கனவே பெர்சிய வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடாவை இணைக்கும் முக்கிய எரிசக்தி போக்குவரத்து பாதையான ஹோர்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியுள்ளதால், கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் விலை சர்வதேச சந்தையில் கடுமையாக உயர்ந்துள்ளது.

ஹவுதிகள் மீண்டும் செங்கடல் வழித்தடத்தில் தாக்குதல்களைத் தொடங்கினால், எரிசக்தி விலையேற்றம் உலக நாடுகளுக்குப் பெரும் சவாலாக அமையும் எனப் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
மீனா அம்மா வீட்டிற்கு வந்ததும் கிண்டல் செய்து சிரித்த விஜயா, என்ன நடந்தது?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
சேது-ஐஸ்வர்யா நிச்சயதார்த்தத்தில் நடந்த பரபரப்பு சம்பவம், தமிழ் செய்யப்போவது என்ன?- சின்ன மருமகள் சீரியல் Cineulagam
Super Singer Junior: ஒட்டுமொத்த அரங்கத்தையே அழ வைத்த பார்வையற்ற சிறுவன்... புல்லரிக்க வைத்த குரல் Manithan