இலங்கையில் பொதிகளை அனுப்பும் மற்றும் பெறும் மக்களுக்கு அவசர எச்சரிக்கை
தபால் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை போன்ற ஒரு இணையதளத்தைப் பயன்படுத்தி மோசடி நடைபெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஒரு குறிப்பிட்ட நபர் அல்லது குழுவினர், பொதிகளை பெறுவதற்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்று பலருக்கு கைபேசி குறுஞ்செய்திகள் மூலம் தெரிவித்துள்ளதாக தபால் திணைக்களம் கூறியுள்ளது.
மேலும், வாடிக்கையாளர்களை ஒன்லைனில் பணம் செலுத்துமாறு கேட்டு இந்த மோசடி நடைபெற்று வருவதும் தெரியவந்துள்ளது.
இணைய மோசடி
அதற்கமைய, இந்த மோசடிக்காரர்கள் வாடிக்கையாளர்களின் கணக்குகளில் இருந்து மோசடியாக பணத்தைப் பெறும் சம்பவங்கள் குறித்து தங்களுக்கு முறைப்பாடுகள் வந்துள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக குற்றப் புலனாய்வு திணைக்களம் மற்றும் பிற தொடர்புடைய நிறுவனங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற மோசடியான குறுஞ்செய்தி இணைப்புகள், போலி இணையதளங்கள் மற்றும் ஒன்லைன் கட்டணக் கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு தபால் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
பண மோசடி
இதற்கிடையில், நாட்டில் தங்கியிருந்த போது பணமோசடி கும்பலில் ஈடுபட்ட 18 வெளிநாட்டினர் ஏப்ரல் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது சந்தேக நபர்களான வெளிநாட்டவர்களை பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.
கைது செய்யப்பட்டவர்களில் 16 சீன நாட்டினரும், இரண்டு கம்போடிய நாட்டவர்களும் அடங்குவர்.
அமெரிக்காவால் ஈரானில் ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா..! 19 மணி நேரம் முன்
Tamizha Tamizha: காதலித்த கணவருக்கு கண்முன் நடந்த இரண்டாவது திருமணம்! 14 ஆண்டுகளாக குறையாத காதல் Manithan
வெளியே போக சொன்ன சேது, அதிர்ச்சி முடிவு எடுத்த தமிழ்ச்செல்வி... சின்ன மருமகள் சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam