எல்ல பகுதியில் காட்டுக்கு தீ வைத்தவர் கைது
கடந்த 24 ஆம் திகதி எல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட காட்டு பகுதிக்கு தீ வைத்ததாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் மேலும் ஒரு காட்டுப் பகுதிக்கு தீ வைக்க முற்பட்ட போது கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எல்ல கினலன் தோட்டத்தை சேர்ந்த 32 வயதுடைய ஒருவரே இவ்வாறு நேற்று ( 25) கைது செய்யப்பட்டுள்ளார்.
இரகசிய தகவல்
சந்தேக நபர் காடுகளுக்கு தீ வைப்பதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த 24 ஆம் திகதி கினலன் தோட்ட வனப்பகுதி ஏற்பட்ட காட்டு தீயினால் சுமார் 15 ஏக்கர் காடு எறிந்து நாசமாகி உள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சந்தேக நபரை இன்றைய தினம் பண்டாரவளை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக எல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri

ஜனனி, சக்திக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தர்ஷன் கூறிய வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam

Singappenne: அன்பு, ஆனந்தியின் புதிய திட்டம்- உதவி செய்யும் யாழினி.. பயந்து நடுங்கும் துளசி Manithan

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri
