நுவரெலியாவில் முச்சக்கரவண்டியுடன் லொறி மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞன் பலி
நுவரெலியா (Nuwara Eliya) பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பதுளை பிரதான வீதியில் ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
நுவரெலியா - பதுளை (Badulla) பிரதான வீதியில் மதுர கணபதி ஆலயத்திற்கு அருகாமையில் நேற்று (25) முச்சக்கரவண்டி ஒன்றும் லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன்போது, முச்சக்கரவண்டி சாரதி படுகாயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
லொறியின் சாரதி கைது
இருப்பினும், அவர் சிகிச்சை பலனின்றி இன்றைய தினம் (26) காலை உயிரிழந்துள்ளார்.

அதேவேளை, விபத்தில் உயிரிழந்த முச்சக்கரவண்டி சாரதி நுவரெலியா கலுகெல பகுதியை சேர்ந்த (29) வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
இந்நிலையில், இளைஞனின் சடலமானது உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த விபத்தில் முச்சக்கரவண்டி பாரியளவில் சேதமடைந்துள்ள நிலையில், விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிரித்தானியாவின் மில்லியனர் எண்ணிக்கையில் கடும் வீழ்ச்சி - வெளிநாடுகளில் குடியேறும் செல்வந்தர்கள் News Lankasri
Numerology: இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்ப துன்பங்களை மறந்து வாழ்வார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan
குணசேகரன் பற்றி வெளிவந்த ரகசியம், கடும் ஷாக்கில் பெண்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
டெல்லி குண்டுவெடிப்பு ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடியா? 2 வாரம் முன்பே எச்சரித்த LeT தளபதி News Lankasri
குழந்தையை கவனிக்கும் பொறுப்பை வாழ் நாள் முழுவதும் ஏற்க தயார்... மாதம்பட்டி ரங்கராஜ் கொடுத்த ஷாக் Manithan