போலி தடுப்பூசி அட்டை விவகாரம்! அச்சத்தில் குடும்பஸ்தர் எடுத்த விபரீத முடிவு
ஜேர்மனியில் குடும்பஸ்தர் ஒருவர் போலியாக தடுப்பூசி அட்டையை தயாரித்தது தொடர்பில் கைது செய்துவிடுவார்கள் என்ற அச்சத்தில் தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளைக் கொன்ற பின் அவரும் தனது உயிரை மாய்துகொண்டதாக ஜெர்மன் பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டேவிட் ஆர் என அழைக்கப்படும் குறித்த நபர் அவரது வீட்டிற்குள் வைத்து துப்பாக்கியால் அவரது குடும்ப உறுப்பினரை சுட்டு கொன்று விட்டு தானும் உயிரை மாய்து கொண்டதாக தெரியவருகின்றது.
இவ்வாறு உயிரிழந்தவர்கள் 40 வயதுடைய இரு பெரியவர்களும், நான்கு, எட்டு மற்றும் 10 வயதுடைய மூன்று குழந்தைகளும் ஆவர்.
டேவிட் தனது மணைவிக்கு போலி கோவிட் அட்டையை தயாரித்தை அவரது முதலாளி கண்டுபிடித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.
போலி தடுப்பூசி அட்டை தயாரித்து குற்றச்சாட்டில் தானும் தனது மணைவியும் கைது செய்யப்பட்ட பின்னர் தங்களது பிள்ளைகளின் நிலையை நினைது பயந்து இவ்வாறு கொலை செய்துள்ளதாக குறித்த நபர் விட்டு சென்ற தற்கொலை கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் இடம்பெற்ற விட்டிலிருந்து துப்பாகி ஒன்றை பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri
