3 கிலோ 100 கிராம் கஞ்சாவை கொண்டு சென்ற நபர் ஒருவர் விளக்கமறியலில்
வவுனியாவிலிருந்து திருகோணமலைக்கு 3 கிலோ 100 கிராம் கஞ்சாவை கொண்டு சென்ற நபர் ஒருவரை இம்மாதம் 22 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் ரஸாக் பயாஸ் இன்று (18) உத்தரவிட்டார்.
குறித்த நபரை திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வைத்து கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மருதம் குளம், வவுனியா பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் வவுனியா பகுதியிலிருந்து டாட்டா சிறியரக லொறியொன்றில் பொருட்களுடன் மூன்று கிலோ 100 கிராம் கஞ்சா பொதியை மறைத்து கொண்டு சென்ற போதே உப்புவெளி போதைப் பொருள் குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொண்ட போது சந்தேக நபர் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபரை பொலிஸார் திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
நேட்டோ பிரதேசத்திற்குள் அத்துமீறிய ரஷ்யப் பாதுகாப்புப் படையினர்... அதிகரிக்கும் பதற்றம் News Lankasri
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri