ஜெர்மனியில் இருந்து யாழ்ப்பாணம் வந்தவரின் அடாவடித்தனம் - ஒருவர் ஆபத்தான நிலையில் அனுமதி
யாழ்ப்பாணத்தில் நபர் மீது தாக்குதல் நடத்திய வெளிநாட்டவர் உட்பட 11 பேரை பொலிஸார் தேடி வருகின்றனர்.
ஜெர்மனியில் இருந்து யாழ்ப்பாணம் வந்த நபர் உட்பட குழுவொன்றை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
குறித்த கும்பலினால் கடுமையான தாக்குதலுக்கு உள்ளான நபர் படுகாயம் அடைந்த நிலையில், யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குடும்பத்தினருக்கு இடையில் முரண்பாடு
ஜெர்மன்வாசிக்கும் யாழ்ப்பாணத்திலுள்ள அவரின் குடும்பத்தினருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவரை மண்வெட்டியின் பிடி மற்றும் கூரிய ஆயுதங்களால் மூர்க்கத்தனமாக தாக்கியுள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதி
அதீத மதுபோதையில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அயலவர்களின் உதவியுடன் படுகாயம் அடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.