மீண்டும் நபரொருவர் பொலிஸ் அதிகாரியால் தாக்கப்பட்ட சம்பவம் - வெளியானது காணொளி
புதிய இணைப்பு......
இரத்தினபுரி, கிரியெல்ல பிரதேசத்தில் நபர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் சப்ரகமுவ பிரதி பொலிஸ் மா அதிபர் ரன்மல் கொடித்துவக்கு பொலிஸ் சுகாதார சேவைகள் நலன்புரி மற்றும் களப்படை தலைமையகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் பொலிஸ் திணைக்களத்தின் நற்பெயருக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தும் என பொலிஸ் பேச்சாளர் இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்த மூத்த அதிகாரியின் மோசமான நடத்தையை தான் ஏற்கவில்லை என்றும் அவர் கூறினார்.
இதேவேளை, அண்மையில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக பதவி உயர்வு பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மீண்டும் நபரொருவர் பொலிஸ் அதிகாரியால் தாக்கப்பட்ட சம்பவம் - வெளியானது காணொளி
பொலிஸ் அதிகாரியொருவர் நபரொருவரை தாக்கி அவரது வாகன சாரதி அனுமதிப் பத்திரத்தை பெற முயலும் காணொளியொன்று தற்போது வைரலாகியுள்ளது.
சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரன்மல் கொடித்துவக்கு தான் குறித்த காணொளியில் இடம்பெற்றிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
குறித்த சம்பவமானது இரத்தினபுரி - கிரியெல்ல வீதியில் நடந்துள்ளதாக தெரியவருகிறது.
இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை அண்மையில் போக்குவரத்து பொலிஸ் அதிகாரியொருவர் இரு இளைஞர்களை தாக்கிய சம்பவமொன்று மட்டக்களப்பு - ஏறாவூர் பகுதியில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

sambar podi: ஐயங்கார் வீட்டு சாம்பார் பொடி நாவூறும் சுவையில் செய்வது எப்படி? காரசாரமான ரெசிபி Manithan
