கல்ஓயா ஆற்றுப்பகுதியில் இரகசிய கசிப்பு உற்பத்தி நிலையம் கண்டுபிடிப்பு
அம்பாறை தலைமையக பொலிஸாரின் ஊழல் தடுப்புப்பிரிவினரால் கல்ஓயா பாலத்திற்கு அடியில் செங்கல் உற்பத்தி நிலையம் (செங்கல் வாடி) என்ற போர்வையில் முன்னெடுக்கப்பட்டு வந்த பாரிய அளவிலான கசிப்பு உற்பத்தி நிலையம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பணப்பரிமாற்றம் இரகசியமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே இந்த கசிப்பு உற்பத்தி நிலையம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஒருவர் கைது
இதன்போது அம்பாறை சேனநாயக்கபுர பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சுமார் 90,000 மில்லி லீட்டர் கோடா மற்றும் கசிப்பு காய்ச்சுவதற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த நபர் செங்கல் அறுக்கும் பணியில் ஈடுபடுவது போல் நடித்து, அதன் மறைவில் நீண்டகாலமாக கசிப்பு காய்ச்சும் தொழிலை முன்னெடுத்து வந்துள்ளமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
சந்தேகநபரினால் காய்ச்சப்படும் ஒரு போத்தல் கசிப்பு 1,500 ரூபா வீதம் மூன்று நபர்களுக்கு விற்பனைக்காக வழங்கப்பட்டு வந்துள்ளது.
பணப்பரிமாற்றங்கள்
இதற்கான பணப்பரிமாற்றங்கள் இரவு வேளைகளில் கல் ஓயா பாலத்திற்கு அடியில் மிகவும் இரகசியமான முறையில் இடம்பெற்று வந்துள்ளமை பொலிஸாரால் கண்டறியப்பட்டுள்ளது.
இவ்விடயம் குறித்து மேலதிக விசாரணைகளை அம்பாறை தலைமையக பொலிஸாரின் ஊழல் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்டுள்ளதுடன் கைதான சந்தேகநபர் சட்ட நடவடிக்கைக்காக அம்பாறை நீதிவான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலைபடுத்த நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குடும்பத்திற்கு எதிராக மீனா செய்த காரியம், கோபத்தில் கடுமையாக திட்டிய ராஜி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam