நாயை காப்பாற்றும் முயற்சியில் பரிதாபமாக உயிரிழந்த நபர்
புத்தளத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மாதம்பே, விலத்தவ பகுதியில் இருந்து நான்கு வழிச் சந்தியை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வேன் எதிரே வந்த மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
வேனுக்கு குறுக்காக பாய்ந்த நாயை காப்பாற்றும் முயற்சில் ஈடுபட்ட வேளையில் விபத்து ஏற்பட்டுள்ளது.
வீதி விபத்து
நேற்றைய தினம் இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிள் சாரதி படுகாயமடைந்த நிலையில் கல்முருவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தும்மலசூரிய பிரதேசத்தில் வசிக்கும் 63 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சடலம் கல்கமுவ வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பில் வேனின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாதம்பை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 10 மணி நேரம் முன்

Ethirneechal: வீட்டிற்கு திரும்பிய மருமகள்கள்! கதிரை அறைந்த விசாலாட்சி... எதிர்பாராத திருப்பம் Manithan

மாட்டப்போகும் ஆனந்தி.. வில்லி கைக்கு போகும் ஸ்கேன் ரிப்போர்ட்! சிங்கப்பெண்ணே இன்றைய ப்ரோமோ Cineulagam
