பிரதிப் பொலிஸ் மா அதிபராக நடித்து கப்பம் பெற்ற நபர் கைது
கடவத்தை பிரதேசத்தில் பிரதிப் பொலிஸ் மா அதிபராக தன்னை வெளிக்காட்டி வர்த்தகர்களிடம் கப்பம் பெற்று வந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெல்லம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதான ஒருவரே இவ்வாறு மனிதப் படுகொலைகள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் தடுப்புப் பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
தற்போது சேவையில் இருக்கும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவராக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் குறித்த சந்தேக நபர், வர்த்தகர்களுக்கு தொலைபேசி அழைப்புக்களை மேற்கொண்டு அச்சுறுத்தி கப்பம் பெற்று வந்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்
இந்நிலையில் குறித்த சந்தேக நபர், வர்த்தகர்களுக்கு தொலைபேசி மூலம் அச்சுறுத்தி பணம் பெறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களுடன் குறித்த வர்த்தகர் தொலைபேசி தொடர்பில் இருந்துள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலையும் 6 நாட்கள் முன்

யூத் படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்த இந்த நடிகையை உங்களுக்கு நினைவு இருக்கா... இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam

வான்வழித் தாக்குதல் அச்சுறுத்தல்... ஐரோப்பிய நாடொன்றின் மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை News Lankasri
