விகாரையின் உரிமை தொடர்பில் இருதரப்பு மோதல்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
தேவாலயத்தின் உரிமை தொடர்பில் இருதரப்பினருக்கு மத்தியில் ஏற்பட்ட மோதல் காரணமாக கண்டி - அலவதுகொட நகரில் அமைந்துள்ள சமன் விகாரைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
கண்டி மாவட்ட பௌத்த விவகாரங்கள் ஆணையாளரின் உத்தரவின் பேரிலேயே குறித்த விகாரை மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகிது.
தொடர்ந்து, விகாரையின் பஸ்நாயக நிலமே மற்றும் பூசகர் தரப்பினர் மத்தியில் விகாரையின் உரிமை தொடர்பில் ஏற்பட்ட முறுகலே இந்நிலைக்கு காரணமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பலத்த மோதல்
அலவதுகொட சமன் விகாரையில் பரம்பரையாக செயற்பட்டு வந்த பூசகர், கடந்த 08ஆம் திகதி உயிரிழந்துள்ள நிலையிலேயே அவரின் குடும்பத்தினர் மற்றும் விகாரையின் பஸ்நாயக்க நிலமே ஆகியோருக்கிடையில் தேவாலயத்தின் உரிமை தொடர்பில் பலத்த மோதல் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
"காலம் முடிவு செய்துவிட்டது".. முதலமைச்சர் விஜய்யை தொடர்ந்து அரசியலில் களமிறங்குகிறாரா சூர்யா.. Cineulagam
50 கிலோ விஷம், 30,000 காப்ஸ்யூல்கள்: 15,000 பேரை கொல்ல சதித்திட்டம்: பயாஸ் பிரேம்ஜி கைது News Lankasri