யாழில் உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு!
யாழில் உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவமானது நேற்றையதினம்(16.8.2026) இடம்பெற்றுள்ளது.
இதன்போது அரசடி வீதி, கந்தர்மடம் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சிகிச்சை
இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த மாணவன் கடந்த 10ஆம் திகதி உயிரியல் பிரிவில் இரண்டாவது நாள் பரீட்சை எழுதும்போது மயக்கம் ஏற்பட்டது.

இதன்போது அவரது பெற்றோர் வரவழைக்கப்பட்டு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.பின் சிகிச்சையின் பின் வீடு திரும்பினார்.
அதன்பின்னர் மீண்டும் 12 ஆம் திகதி உடல் சுகயீனம் ஏற்பட்ட நிலையில் மீண்டும் சிகிச்சை பெற்றார்.
உயிரிழப்பு
பின்னர் நேற்றிரவு (16) உணவு அருந்திவிட்டு இருந்தவேளை வலிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

அவரது மரணம் சம்பந்தமான விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி வி.அன்ரலா மேற்கொண்டார்.
உடற்கூற்று பரிசோதனைகளின் போதும் குறித்த மரணத்துக்கான காரணம் கண்டுபிடிக்கப்படாத நிலையில் உடற்கூற்று மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அதிரடியாக கைது செய்யப்பட்ட ஷிரான் பாசிக்..! மத்திய குற்றப் புலனாய்வுத் துறைக்கு கிடைக்கப்பெற்ற அனுமதி