வடக்கு மாகாண மக்களுக்கு வெளியான அறிவிப்பு : 4 மாவட்டங்களில் 2 நாட்கள் மின்தடை
வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கான மின்சார பரிமாற்ற வடத்தை மாற்றியமைக்கும் பணிகளுக்காக வடக்குு மாகாணத்துக்கான வவுனியா அனுராதபுரம் புதிய மின் பரிமாற்ற கட்டமைப்பு துண்டிக்கப்படவுள்ளது.
இதன்காரணமாக இன்று மற்றும் நாளை(02,03.10.2026) யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா ஆகிய மாவட்டங்கள் முழுவதும் மின் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னேற்பாடுகளைச் செய்துகொள்ளுமாறு
இதன் பிரகாரம் இன்று 2 ஆம் திகதி வௌ்ளிக்கிழமை நண்பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரையும் 3 ஆம் திகதி சனிக்கிழமை நண்பகல் 12 மணி முதல் 6.30 மணி வரையும் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.

எனவே, பொதுமக்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் இந்த மின் தடங்கல் நேரத்தைக் கருத்தில் கொண்டு, தங்களுக்குத் தேவையான முன்னேற்பாடுகளைச் செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.