வாகன இறக்குமதி தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்ட தகவல்
நாட்டில் ஆகஸ்ட் மாதத்தில் தனியார் மற்றும் வர்த்தக வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக 189 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின் படி இந்த விடயம் தெரியவந்துள்ளது.
2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் வாகன இறக்குமதி செலவில் 24.2 சதவிகிதம் குறைவாகும்.
தனியார் மற்றும் வர்த்தக வாகன இறக்குமதி
கடந்த ஜூலை மாதம், தனியார் மற்றும் வர்த்தக வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக 241 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளது.

அதன்படி, ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் ஆகஸ்ட் மாதத்தில் வாகன இறக்குமதி செலவு சுமார் 52 மில்லியன் அமெரிக்க டொலர்கள் குறைந்துள்ளது.
இருப்பினும், இந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் வாகன இறக்குமதிக்காக செலவிடப்பட்ட மொத்த தொகை 1,684 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.
வாகனங்களுக்காக வழங்கப்படும் கடன்
வாகனங்களுக்காக வழங்கப்படும் கடன்களுக்கு 70 சதவிகிதம் என்ற அதிகபட்ச கடன் வரம்பு விதிக்கப்பட்டதாலும், வாகன இறக்குமதி மீது விதிக்கப்படும் சுங்க வரியில் கூடுதல் கட்டணம் விதிக்கப்பட்டதாலும் வாகன இறக்குமதிகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன என்று மத்திய வங்கி ஆளுநர் ச. நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

அடுத்த மூன்று மாதங்களுக்கு வாகன இறக்குமதிக்காக திறக்கப்பட்ட கடன் கடிதங்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.
இதன் விளைவாக, வரும் மாதங்களில் வாகன இறக்குமதிகள் மேலும் குறையும் என்றும் மத்திய வங்கி ஆளுநர் கூறியுள்ளார்.