முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன இலஞ்ச ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார்!
புதிய இணைப்பு
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் (CIABOC) வாக்குமூலம் அளித்த பின்னர் முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
இன்று காலை ஆணைக்குழுவின் முன் முன்னிலையாகி நான்கு மணி நேரத்திற்கும் மேலாக வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டு அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
முதலாம் இணைப்பு
முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன இலஞ்ச ஆணைக்குழுவின் முன் முன்னிலையாகியுள்ளார்.
இலஞ்ச ஆணைக்குழுவால் விடுக்கப்பட்ட அழைப்பாணைக்கு இணங்க இன்று காலை (02) ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.
வாக்குமூலம் பதிவு
2007-ஆம் ஆண்டில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட ஓர் அறிக்கை தொடர்பாக இலஞ்ச ஆணைக்குழுவின் முன் முன்னிலையாகுமாறு அவர் அழைக்கப்பட்டிருந்தார்.

அதன்படி, முன்னாள் அமைச்சரிடம் தற்போது வாக்குமூலம் பதியப்பட்டு வருகின்றது.
பாக்ஸ் ஆபிஸ்: சூர்யாவின் சீன் படம் வெளிவந்த 12 நாளில் உலகம் முழுவதும் செய்துள்ளா வசூல்... Cineulagam
இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கும் சீரியல் நடிகை மைனா நந்தினி... அவரே வெளியிட்ட கியூட் வீடியோ Cineulagam