கிழக்கு மாகாணத்திற்கு புதிய ஆளுநர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள நபர்
கிழக்கு மாகாணத்திற்கு புதிய ஆளுநர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளதாகச் செய்திகள் வெளியானதையடுத்து அண்மையில் ஓய்வுபெற்ற கிழக்கு மாகாண முதலமைச்சின் முன்னாள் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸை நியமிக்குமாறு கிழக்கு மாகாண மக்கள் அமைப்பு இன்று(27) வேண்டுகோள் விடுத்துள்ளது.
கிழக்கு மாகாணத்துக்கு புதிய ஆளுநர் ஒருவரை நியமிக்க அரச உயர் மட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அந்த ஆளுநர் பதவிக்குத் தகுதியானவரும் மூவின மக்களையும் அரவணைத்துச் செல்லக்கூடிய ஆளுமையுள்ள அனுபவமுள்ள ஒருவராகக் கிழக்கு மாகாண முதலமைச்சின் முன்னாள் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ் உள்ளார்.
எனவே இவரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கிழக்கு மாகாண மக்கள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இதே வேளை இவரை நியமிக்குமாறு அரசியல் உயர்மட்டங்களினால் அரசுக்குப்
பரிந்துரைக்கப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

இந்தியாவிடம் பின்னடைவு... கடும் நெருக்கடியில் இருக்கும் பாகிஸ்தான் எடுத்துள்ள அந்த முடிவு News Lankasri

sambar podi: ஐயங்கார் வீட்டு சாம்பார் பொடி நாவூறும் சுவையில் செய்வது எப்படி? காரசாரமான ரெசிபி Manithan
