கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு பிரஜை கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் 12 மாத்திரைகளுடன் வெளிநாட்டு நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று (23.03.2024) காலை இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகளினால் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
சந்தேகநபர் பிரேஸிலில் இருந்து டுபாய் ஊடாக இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
போதை மாத்திரைகள்
இந்நிலையில், அவரிடம் இருந்து 132 கிராம் எடையுடைய 12 மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டதுடன், அவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.
மேலும், சந்தேக நபர் வெனிசுலாவைச் சேர்ந்த 41 வயதுடையவர் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

அப்ப புரியல, இப்ப புரியுது! 3 ஆண்டுகளுக்கு முன் வசியின் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே Manithan

ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம், பளார் விட்ட நபர், இவர்களுக்கும் உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam
