மதுவரி கொள்கை மோசடியில் கைதான டெல்லி முதலமைச்சருக்கு விளக்கமறியல்
இந்தியாவில் டெல்லி மதுவரி கொள்கை மோசடியில் கைது செய்யப்பட்டுள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை 10 நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரணை செய்ய டெல்லி நீதிமன்றம் அமலாக்கல்துறைக்கு அனுமதி வழங்கியுள்ளது.
டெல்லி மதுபான கொள்கை வழக்கில் டெல்லியின் துணை முதலமைச்சர் மணீஸா சிசோடியா உட்பட இரண்டு அமைச்சர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்தநிலையில், வழக்கின் விசாரணைக்காக தொடர்ந்து கெஜ்ரிவாலுக்கும் அறிவித்தல்கள் அனுப்பப்பட்டு வந்தன.
முதலமைச்சர் அந்த விசாரணை அழைப்புக்களை சட்டவிரோதம் என்று நிராகரித்து வந்ததுடன் இறுதியாக தம்மை அமுலாக்கல்துறை கைது செய்யக்கூடாது என்று கோரி அவர் டெல்லி நீதிமன்றில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
எனினும், நீதிமன்றம் அவருக்கு நிவாரணத்தை வழங்க மறுத்தநிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்ற தீர்ப்பு
இதனையடுத்து, நேற்று (22.03.2024) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட கெஜ்ரிவால் மீது அமலாக்கல்துறை கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.
டெல்லி மதுபான கொள்கை ஊழல் விவகாரத்தில் கெஜ்ரிவால் மூளையாக செயற்பட்டார் என்றும் அவர் தான் முக்கிய குற்றவாளி என்றும் அமலாக்கத் துறை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
எனவே, அவரை 10 நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரணை செய்ய அமலாக்கல்துறை மன்றின் அனுமதியை கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |