புதுக்குடியிருப்பில் துவிச்சக்கரவண்டி திருட்டில் ஈடுபட்ட நபர் கைது
புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் துவிச்சக்கர வண்டி திருட்டில் ஈடுபட்ட நபர் இரகசிய கமராவின் உதவியுடன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை இன்றைய தினம் (21.02.2024) இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அண்மைய பல நாட்களாக துவிச்சக்கரவண்டி திருடப்பட்டு வந்துள்ளது.
பொலிஸாரினால் கைது
இந்நிலையில் இன்றையதினம் துவிச்சக்கரவண்டி திருட்டில் ஈடுபட்ட சந்தேகநபர் புதுக்குடியிருப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தர்மபுரம் பகுதியை சேர்ந்த 49 வயது மதிக்கதக்க நபர் இரகசிய கமராவின் உதவியுடன் இன்று புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரிடம் இருந்து 6 துவிச்சக்கர வண்டிகள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த நபரை நாளையதினம் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த இருப்பதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
திடீரென ஜனனியை தள்ளி அடிக்க சென்ற கதிர்... பரபரப்பான எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
விஜய் - சங்கீதா சேர்ந்து வாழ முடிவு! வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் எதிர்பாராத திருப்பம் Manithan
10 நாட்களாக வலியில் துடித்துள்ள கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி... அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam