வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம் - ஒருவர் கைது
வவுனியா, ஏ9 வீதியில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஏ9 வீதி திறந்த பல்கலைக் கழகம் முன்பாக நடந்த இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, வவுனியா, ஏ9 வீதியூடாக வவுனியா நகரத்தை நோக்கி மோட்டர் சைக்கிள் ஒன்று சென்று கொண்டிருந்த போது அதே வழியில் வந்த இரு சொகுசு வாகனங்கள் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
பொலிஸார் விசாரணை
குறித்த விபத்தில் மோட்டர் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய ஒரு கார் பொலிஸாரால் கொண்டு கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அதன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன், மற்றைய வாகனம் தப்பிச் சென்றுள்ளது.
இந்நிலையில், விபத்து தொடர்பில் வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கான நீதி.. இன்று வரை கேள்விக்குறியே! 4 மணி நேரம் முன்
செம மாஸ் வரவேற்பு பெற்றுள்ள கருப்பு திரைப்படம்... சந்தோஷத்தில் சூர்யா வெளியிட்ட செம வீடியோ Cineulagam
சனி ஜெயந்தியில் உருவாகிய புதாதித்ய ராஜயோகம் ... இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறந்தாச்சி! Manithan