சுவிட்சர்லாந்து விளையாட்டு விழாவில் வெளியேற்றப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் சுவிஸ் கிளை பொறுப்பாளர்
சுவிட்சர்லாந்தில் (Switzerland) இன்று (10) ஆரம்பமாகி இடம்பெற்ற 25ஆவது தமிழர் விளையாட்டு விழாவில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக, விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளையின் பொறுப்பாளர் ரகுபதியை மைதானத்தை விட்டு பொலிஸார் வெளியேற்றியுள்ளனர்.
விடுதலைப் புலிகளின் தலைவர் மற்றும் அவரது மகள் துவாரகா ஆகியோர் உயிருடன் இருப்பதாக பல சர்ச்சைகள் எழுந்தன. இவற்றை அடிப்படையாக கொண்டு உலகம் முழுவதும் வாதப் பிரதிவாதங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இவற்றிற்கிடையில், இன்று சுவிட்ஸர்லாந்தில் நடைபெற்ற தமிழர் விளையாட்டு விழாவிலும் குறித்த சர்ச்சையின் அடிப்படையிலேயே வைத்து கலவரம் ஏற்பட்டுள்ளது.
இந்த விழாவின் போது விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளையின் பொறுப்பை மீண்டும் ஏற்றுக் கொள்ளும் படி அதன் தலைவர் தன்னிடம் நேரடியாகத் தெரிவித்ததாகக் கூறி, அந்தப் பொறுப்பை சில நாட்களுக்கு முன்னர் எடுத்துக்கொண்ட ரகுபதிக்கும், முன்னாள் போராளிகள் சிலருக்கும் இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாகவே ரகுபதி பொலிஸாரால் வெளியேற்றப்பட்டுள்ளார்.
இதன்போது, இந்த கலவரத்தில் ஈடுபட்ட சில முன்னாள் போராளிகளையும் மைதானத்திற்குள் நுழையக்கூடாது என்று உத்தரவிடப்பட்டதாகவும் ரகுபதியை வெளியேற்றா விட்டால் தாம் விளையாட மாட்டோம் என சில வீரர்கள் தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |