சாணக்கியனுக்கு ஜனாதிபதி 60 கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளார்: கோவிந்தன் கருணாகரம் பகிரங்கம்
சாணக்கியனுக்கு ஜனாதிபதி 60 கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று(10) இடம்பெற்று ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
தமிழ் பொதுவேட்பாளர்
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“ஜனாதிபதி தேர்தலுக்காக 25க்கும் மேற்பட்டவர்கள் களமிறக்கப்பட்டுள்ளபோதிலும் வடகிழக்கினை மையப்படுத்தி ஒட்டுமொத்த தமிழர்களுக்காகவும் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவர் பெயரிடப்பட்டுள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரனின் பெயரை தமிழ் தேசிய கட்சிகளும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் இணைந்து முன்மொழிந்துள்ளனர்.
தமிழ் பொதுவேட்பாளர் தேவை என்ற நிலைமை இன்று உருவாகியுள்ளது.
கடந்த காலத்தில் இந்த நாட்டினை மாறிமாறி ஆட்சிசெய்த அரசாங்கங்களினாலும் தமிழர்களின் பிரச்சினைகள் கவனத்தில் கொள்ளப்படாத நிலையில் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரின் தேவை ஏற்பட்டது.
தமிழ் மக்களின் பிரச்சினை இன்னும் தீர்க்கப்படாத நிலையில் இன்றும் இரண்டாம் தர பிரஜைகளாகவே நடாத்தப்படுகிறனர் என்பதையும் 2009ஆம் ஆண்டுக்கு முன்னர் தமிழ் கட்சிகள் ஒன்றாக செயற்பட்டது போன்று தற்போதும் ஒன்றாக பயணித்து தமிழ் மக்களின் உரிமைக்காக குரல்கொடுக்கவேண்டும் என்பதற்காக தமிழ் பொது வேட்பாளரின் அவசியம் உணர்ந்து அதனை செய்வதற்கு முன்வந்துள்ளோம்.
ஜனாதிபதி தேர்தலில் வெல்லக்கூடிய வேட்பாளர்கள் எங்களுடன் பேசுவதற்கான காலம் உருவாகி உள்ளதாக நான் உணர்கின்றேன். சாணக்கியனுக்கு தமிழரசு கட்சியின் அனுமதி இன்றியே 60 கோடி ரூபாய் நிதி வழங்கப் பட்டுள்ளது.
எதிர்வரும் தேர்தலுக்காக கட்சியின் முடிவின்றி இவ்வாறான முடிவுகளை எடுத்துள்ளவர் பற்றி மக்கள் தான் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்.
நான் அறிந்த வரையில் சுமார் சாணக்கியனுக்கு ஜனாதிபதி அவர்கள் 60 கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளார்.” என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |