யாழில் ஆலயமொன்றில் பிரசாதம் தயாரித்துக் கொண்டு இருந்த நபர் மர்மமான முறையில் மரணம்
யாழ்ப்பாணம்(Jaffna) சுன்னாகம் பகுதியில் இருந்து நேற்றைய தினம் (23) குடும்பஸ்தர் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சுன்னாகம் - சூளானை பகுதியைச் சேர்ந்த தங்கவேலு கோபிநாத் (வயது 53) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மரண விசாரணை
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், சுன்னாகம் - சூளானை பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் திருவிழா இடம்பெற்று வரும் நிலையில் குறித்த நபர் பிரசாதம் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளார்.
ஆலயத்திற்கு அருகில் உள்ள வீட்டின் உரிமையாளர் மோட்டார் இயங்கவில்லை என கூறி, பிரசாதம் தயாரிப்பில் ஈடுபட்ட குறித்த நபரை அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு சென்று பார்த்த அந்த நபர் சோதனை கருவியை எடுத்து வருமாறு வீட்டின் உரிமையாளரிடம் கூறியுள்ளார்.
அவர் சோதனை கருவியை எடுத்துக்கொண்டு வந்து பார்த்தவேளை அவர் கீழே விழுந்து உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவரது சடலம் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
இந்நிலையில் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 4000 பிச்சைக்காரர்கள்: கவலையில் பாகிஸ்தான்! News Lankasri

இந்த வாரம் ஓடிடி-யில் ரிலீஸாகும் எதிர்பார்ப்புக்குரிய இரண்டு படங்கள்.. Week end என்ஜாய் பண்ணுங்க Cineulagam
