யாழிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற சொகுசு பேருந்தில் ஏற முற்பட்டவருக்கு நேர்ந்த கதி
கிளிநொச்சி(Kilinochchi) பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ-09 வீதி இயக்கச்சி பகுதியில் நேற்று (23.08.2024) இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் (Jaffna) இருந்து கொழும்பு (Colombo) நோக்கி பயணித்த சொகுசு பேருந்து ஒன்று
குறித்த பகுதியில் பயணிகளை ஏற்றிச் சென்றபோது வீதியால் சென்ற ஒருவர் திடீரென
பேருந்தை வழிமறித்து ஏற முற்பட்ட போது பேருந்து சில்லுக்குள் நசியுண்டு
உயிரிழந்துள்ளார்
பொலிஸார் விசாரணை
இந்த விபத்தின் போது கிளிநொச்சி பரந்தன் பகுதியைச் சேர்ந்த தங்கவேல் விஜிதன்
(வயது 40) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி பொது வைத்தியவசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும்,சம்பவம் தொடர்பில் பளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

viral video: ரெட்டிகுலேட்டட் மலைப்பாம்புக்கு அருகில் அசால்ட்டாக சாக்லேட் சாப்பிடும் குழந்தை! Manithan

புலம்பெயர்ந்தோரின் குடும்பங்களும் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்படலாம்: அச்சம் தெரிவித்துள்ள விமர்சகர்கள் News Lankasri
