ஜேர்மனியிலுள்ள விமான தளமொன்றிற்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் : பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு
ஜேர்மனியில் அமைக்கப்பட்டுள்ள நேட்டோ விமான தளம் ஒன்றிற்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜேர்மனியிலுள்ள Geilenkirchen நகரில் அமைக்கப்பட்டுள்ள நேட்டோ விமான தளம் ஒன்றிற்கு பயங்கர அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை மூலம் இரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு
இந்நிலையில் அங்கு பணியாற்றும் அத்தியாவசிய பணியாளர்கள் தவிர்த்து மற்றவர்கள் உடனடியாக விமான தளத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
🚨We raised the security level at NATO Airbase Geilenkirchen based on intelligence information indicating potential threat. All non-mission essential staff have been sent home as a precautionary measure. The safety of our staff is our top priority. Operations continue as planned.
— NATO AWACS (@NATOAWACS) August 22, 2024
குறித்த விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள தோடு, அச்சுறுத்தல் குறித்த எந்த தகவலையும் அதிகாரிகள் வெளியிடவில்லை.
என்றாலும், கவலைக்குரிய விடயம் எதுவும் இல்லை என்றும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.