கண்டி - கொழும்பு வீதியில் நோயாளர் காப்பு வண்டி மோதி ஒருவர் பலி
கண்டியில் (Kandy) இருந்து கொழும்பு (Colombo) நோக்கிப் பயணித்த நோயாளர் காப்பு வண்டி ஒன்று மோதியதில் வீதியில் சென்ற பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கேகாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்பு - கண்டி பிரதான வீதியில் மொலகொட பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக கேகாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதி
மேலும், விபத்தின் போது படுகாயமடைந்த பாதசாரி கேகாலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், உயிரிழந்தவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என்றும் கேகாலை பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், நோயாளர் காப்பு வண்டியின் சாரதியைக் கைது செய்துள்ள கேகாலை பொலிஸார், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 3 நாட்கள் முன்

Viral Video: பாம்புகள் கூட்டமாக ஓய்வெடுப்பதை பார்த்ததுண்டா? 7 மில்லியன் பேரை புல்லரிக்க வைத்த காட்சி Manithan

கூலி படத்தில் வெறித்தனமான வில்லனாக நடிக்க சௌபின் சாஹிர் வாங்கிய சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam
