மின்சார சபை ஊழியர்களை கோடரியால் தாக்க முயன்ற நபர் கைது
மொனராகலையில் வீடு ஒன்றின் மின்சாரத்தை துண்டிக்க வந்த மின்சார சபை ஊழியர்கள் குழுவை தடுத்த நபர் ஒருவர் வெல்லவாய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மின்சாரத்தை துண்டிக்க வந்த மின்சார ஊழியர்களை, சம்பந்தப்பட்ட நபர் கோடரியால் தாக்க முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது.
பின்னர் அவர்மின்வாரிய ஊழியர்களிடம் அநாகரீகமாக நடந்து கொண்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளக்கமறியல் உத்தரவு
இந்நிலையில், குறித்த நபர் தொடர்பாக மின்சார சபை அதிகாரிகள் வெல்லவாய பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில், அவரைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய கைது செய்யப்பட்ட சந்தேக நபரை வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய பின்னர், இம்மாதம் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri

அய்யனார் துணை சீரியல் நடிகர் சோழனுக்கு நிஜ வாழ்க்கையில் இப்படியொரு சோகமா?... கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan
