தகராறில் அயல் வீட்டு நபரின் விரலை கடித்து துண்டாக்கிய நபர்
தனிப்பட்ட தகராறு முற்றியதில் அயல் வீட்டை சேர்ந்த ஒருவரின் கைவிரல் துண்டாகும் வரை கடித்தார் எனக் கூறப்படும் ஒருவரை நேற்று கைது செய்துள்ளதாக மொறட்டுவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சம்பவத்தில் காயமடைந்த நபர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
கட்டை விரலை கடித்த சந்தேக நபர்

சந்தேக நபர், காயமடைந்த நபரின் கட்டை விரலை கடித்துள்ளார். களுபோவில வைத்தியசாலையில் விரலில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காயமடைந்த நபர் தனது வீட்டில் வாகன திருத்தகம் ஒன்றை நடத்தி வருகிறார். அங்கு ஏற்படும் சத்தம் காரணமாக சந்தேக நபர் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளார்.
இதன் காரணமாக ஏற்பட்ட தகராறு முற்றியதில் சண்டை ஏற்பட்டுள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நபர் மொறட்டுவை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 23 மணி நேரம் முன்
பண பிரச்சனையை தீர்த்த அண்ணாமலை, ஆனால் கடைசியில் மனோஜ்-ரோஹினிக்கு ஷாக்... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
தூங்கவோ சாப்பிடவோ முடியவில்லை... சுவிஸ் இரவு விடுதி உரிமையாளர்கள் மீது பாயும் கொலை வழக்கு News Lankasri
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri