சொத்துத் தகராறு - சகோதரியை கொடூரமாக கொலை செய்த சகோதரன்
சொத்துத் தகராறு காரணமாக ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி, மூத்த சகோதரியைக் கொடூரமாக கொலை செய்த சகோதரன் கைது செய்யப்பட்டதாக குளியாப்பிட்டிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேல் எலத்தலாவ திகல்ல பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயாரே அவரது இளைய சகோதரரால் கொல்லப்பட்டுள்ளார். சொத்து தகராறு தொடர்பான சண்டையின் பின்னர் சந்தேகநபரால் பலமுறை கத்தியால் குத்தப்பட்டதை தான் பார்த்ததாக உயிரிழந்தவரின் மருமகள் பொலிஸில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
மருமகளின் சாட்சியங்களின் அடிப்படையில், சந்தேகத்தின் பேரில் இறந்தவரின் இளைய சகோதரனை பொலிஸார் கைது செய்துள்ளனர், மேலும் விசாரணையின் பின்னர் அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.
இரு குடும்பங்களுக்கு இடையே தொடர்ந்து மோதல்கள்
உயிரிழந்தவரும், அவரின் இளைய சகோதரரும் அருகில் வசித்து வந்ததாகவும், சொத்துத் தகராறு காரணமாக இரு குடும்பங்களுக்கு இடையே தொடர்ந்து மோதல்கள் ஏற்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
குளியாப்பிட்டிய பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நெரஞ்சன் அபயவர்தன மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் சமன் திஸாநாயக்க ஆகியோரின் ஆலோசனையின் பேரில் குளியாப்பிட்டிய தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜயவீர ராஜபக்ஷ விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்.





அட நடிகர் சந்தானம் மகனா இது, சூர்யாவுடன் அவர் எடுத்த லேட்டஸ்ட் போட்டோ... நல்லா வளர்ந்துட்டாரே... Cineulagam

சத்தமே இல்லாமல் நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்- பிக்பாஸ் பிரபலங்களுக்கு குவியும் வாழ்த்துகள் Manithan
