மீன் கொள்வனவுக்காக சென்றவர் மீது தாக்குதல்.. பொலிஸார் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு
மட்டு.செட்டிபாளையம் கடற்கரையில் மீன் வாங்க சென்ற மேசன் தொழிலாளி மீது சட்டவிரோத சுருக்குவலை பாவித்து கடற்றொழிலில் ஈடுபடும் குழுவினர் தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பாக பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மட்டக்களப்பில் நேற்று (19) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் பாதிக்கப்பட்டவரான கோபிநாத் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 16ஆம் திகதி கடற்கரைக்கு மீன் வாங்க சென்ற போது தன்னை சட்டவிரோத சுருக்குவலை பாவித்து கடற்றொழிலில் ஈடுபட்டுவரும் நபர் ஒருவர் தாக்கியதாக குறித்த நபர் தெரிவித்துள்ளார்.
அதன் பின், அங்கிருந்து தப்பி ஓடி வீட்டிற்கு சென்று பின்னர் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் ஊடக சந்திப்பில் வெளியிட்டுள்ள தகவல்கள் பின்வரும் காணொளியில் உள்ளன.
அனோஜனின் மரண தண்டனைத் தீர்ப்பு குறித்து உறுதியான தகவல் வெளியாகவில்லை: முபாறக் அப்துல் மஜீத் தெரிவிப்பு