கொழும்பில் 6 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது
கொழும்பில் 1 கிலோ 105 கிராம் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி 06 கோடி ரூபா எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் வெல்லம்பிட்டிய பகுதியை சேர்ந்தவர் என்பதுடன் அவர் டுபாயில் (Dubai) தலைமறைவாகியுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவரான கெசல்வத்த தினுகவின் சகா எனவும் தெரியவந்துள்ளது.
மாளிகாகந்தை நீதிமன்றம்
சந்தேகநபர், குறித்த குற்றக் கும்பலின் அறிவுறுத்தலின்படி, போதைப்பொருட்களை பல்வேறு இடங்களுக்கு எடுத்துச்செல்வதற்கும் பணத்தை மாற்றுவதற்கும் நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், சந்தேகநபர் மாளிகாகந்தை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம், பளார் விட்ட நபர், இவர்களுக்கும் உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

அப்ப புரியல, இப்ப புரியுது! 3 ஆண்டுகளுக்கு முன் வசியின் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே Manithan

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
