வவுனியாவில் 80 போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது
வவுனியாவில் (Vavuniya) 80 போதை மாத்திரைகளுடன் 20 வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட போதை ஒழிப்பு பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா குருமன்காடு பகுதியில் இன்று (28.05.2024) மாலை இடம்பெற்ற விசேட சோதனையின் போதே குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, கைது செய்யப்பட்ட இளைஞரிடமிருந்து 80 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளதோடு அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் வியாபார நோக்கில் குறித்த போதை மாத்திரைகளை வவுனியா, குருமன்காடு பகுதிக்கு கொண்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணைகள்
வவுனியா, பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 20 வயது இளைஞரே இவ்வரறு கைது
செய்யப்பட்டுள்ளதோடு மேலதிக விசாரணைகளின் பின் அவரை நீதிமன்றில்
முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நடிகர் அபிநய் உடன் 4 நாட்கள் ஒரே வீட்டில் இருந்த நடிகை.. தினமும் குடிப்பது பற்றி அவர் சொன்ன காரணம் Cineulagam
சக்திக்கு வந்த அடுத்த பிரச்சனை, ஜனனிக்கு சவால்விடும் அன்புக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam