துப்பாக்கிச் சூட்டில் கைதுச் செய்யப்பட்ட சந்தேகநபர் சிறைச்சாலையில் உயிரிழப்பு
களுத்துறை, கட்டுகுருந்த பிரதேசத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் உயிரிழந்துள்ளதாக களுத்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறைச்சாலையில் நேற்று (27.05.2024) குறித்த சந்தேகநபர் உயிரிழந்துள்ளார்.
பலபிட்டியகொட பிரதேசத்தை சேர்ந்த துஷார ருக்மல் சில்வா என்ற கைதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தக் கைதியை கொலைக் குற்றச்சாட்டின் கீழ் கடந்த 25ஆம் திகதி களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திடீர் உடல் நலக்குறைவு
திடீர் உடல் நலக்குறைவு காரணமாக களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டக் கைதி நேற்று (27.05.2024) பிற்பகல் உயிரிழந்துள்ளதாகச் சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்தச் சந்தேக நபரின் பிரேதப் பரிசோதனை இன்று (28.05.2024) களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையில் நடைபெறவுள்ளது.
இதன்படி மேலதிக விசாரணையைப் பொலிஸ் பரிசோதகர் தமித் ஜயதிலக (Damith jayathilake) மேற்கொண்டு வருகின்றனர்.
மேற்படிக் கொலையில், கடந்த 20ஆம் திகதி களுத்துறை, கட்டுகுருந்தவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் கலமுல்லே தாஷி என அழைக்கப்படும் 40 வயதான தஷ்மின் மதுவந்த சில்வா உயிரிழந்ததுடன், அவரது 7 வயது மகள் காயமடைந்திருந்துள்ளார்.
குறித்த நபர் தனது மூன்று பிள்ளைகளுடன் தனது வீட்டில் இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தப் போதே மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிப் பிரயோகம் செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

40 வயது நடிகருக்கு ஜோடியாகும் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.. திருமணத்திற்கு பின் கிடைத்த தமிழ் படம் Cineulagam

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam
