யாழ். அச்சுவேலியில் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய நபர் கைது
யாழ்ப்பாணம் - அச்சுவேலி பகுதியிலுள்ள வீடொன்றில் பல பெறுமதியான பொருட்களை கவளவாடிய சந்தேக நபர், விரைந்து செயல்பட்ட பொலிஸாரினால் ஒரு மணித்தியாலத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (13.2.2024) இடம்பெற்றுள்ளது.
அச்சுவேலிப் பகுதியை சேர்ந்த 25 வயதான நபரே பொலிஸாரால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸார் விசாரணை
இது குறித்து மேலும் தெரியவருவதாவது, அச்சுவேலி பகுதியில் வெளிநாட்டில் இருந்து வந்த நபரொருவரின் வீட்டில் இருந்து மடிக்கணினி, கையடக்க தொலைபேசி, கடவுச்சீட்டு, வங்கி அட்டைகள், வங்கி புத்தகங்கள் என பெறுமதியான பொருட்கள் களவாடப்பட்ட நிலையில் நேற்று (13) அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
ஒரு மணி நேரத்தில் சந்தேக நபர் அச்சுவேலி குற்றத்தடுப்பு பொலிஸாரால் களவாடப்பட்ட பொருட்களுடன் கைது செய்யப்பட்டார்.
விசாரணைகளின் பின்னர் சந்தேக நபரை நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
குரு- புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்... ஏப்ரல் 3 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி! Manithan
பிரச்சனைகளுக்கு இடையில் ஒன்றாக இணைந்துள்ள மீனா, ஸ்ருதி, ரோஹினி... என்ன விஷயம், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ Cineulagam
அடுத்தடுத்த கேள்விகள் கேட்ட கோமதி, அதிரடி முடிவு எடுத்த பாண்டியன்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
அந்த மாதிரி விஷயங்களில் நான் சிக்க விரும்பவில்லை... பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ஓபன் டாக் Cineulagam