முல்லைத்தீவில் சட்டவிரோதமாக மதுபானங்களை கொண்டு சென்ற நபர் கைது
முல்லைத்தீவு நகர்ப்பகுதியில் மீன் ஏற்றிச்செல்லும் வாகனத்தில் 250 மதுபான போத்தல்களைச் சட்டவிரோதமாகக் கொண்டு சென்ற இளைஞர் ஒருவரை சிறப்பு அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
வாகனங்களில் மீன்களை ஏற்றி செல்வதற்கான பயண அனுமதிப்பத்திரத்தினை பயன்படுத்தி புதுக்குடியிருப்பிலிருந்து முல்லைத்தீவு நோக்கிச் செல்கையில் கரைச்சிக் குடியிருப்பு பகுதியில் வைத்து சிறப்பு அதிரடிப்படையினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
முள்ளியவளை நீராவிப்பிட்டி பகுதியினை சேர்ந்த 20 வயதினை உடைய இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் பயணித்த வாகனமும் முல்லைத்தீவு பொலிஸில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபரை நாளை இவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த முல்லைத்தீவு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பயண தடை விதிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் மதுபான சாலைகள் மூடப்பட்டுள்ளதால்
முல்லைத்தீவு நகரம், முள்ளியவளை, புதுக்குடியிருப்பு பகுதிகளில் மதுபான
போத்தல்கள் 5000- 10000 ரூபா வரையில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டு
வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.









6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 6 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
