மீற்றர் வட்டி விவகாரம்:சுன்னாகத்தில் மேலும் ஒருவர் கைது
மீற்றர் வட்டிக்கு பணத்தினை வாங்கியவர்களை தாக்கும் காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருந்த நிலையில் பரபரப்பு ஏற்பட்டது.
அதனையடுத்து தாக்குதலை மேற்கொள்பவர்களை உடனடியாக கைது செய்யுமாறு வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் உத்தரவை பிறப்பித்திருந்தார்.
நீதிமன்ற நடவடிக்கை
அந்தவகையில் நேற்று முன்தினம்(26.01.2023) சிலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய நபர் ஒருவரும் நேற்று(27.01.2023) கைது செய்யப்பட்டுள்ளார்.

சுன்னாகம் விசேட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், சுன்னாகம் பொலிஸாரால் இக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான
நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
48 மணி நேரத்தில் நரக மழை பொழியும் - ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri
ஈரானின் அபாயகரமான எதிரிகளின் பகுதியில் அற்புதமான மீட்பு நடவடிக்கை: மார்தட்டிக்கொண்ட ட்ரம்ப் News Lankasri
மூன்று நாட்களுக்கான உணவை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri