போலி விசா தொடர்பில் பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை

Bandaranaike International Airport Immigration Department of Immigration & Emigration Passport
By Thulsi Jan 30, 2024 08:49 AM GMT
Report

போலி வெளிநாட்டு விசாக்கள் அல்லது பயண ஆவணங்களை அதிக விலைக்கு ஏற்பாடு செய்யும் போலி பயண முகவர்களிடம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த எச்சரிக்கையை நேற்று (29.1.2024) குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் விடுத்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இலங்கை – தாய்லாந்துக்கிடையிலான விமான சேவைக்கு அமைச்சரவை அனுமதி

இலங்கை – தாய்லாந்துக்கிடையிலான விமான சேவைக்கு அமைச்சரவை அனுமதி

பொதுமக்களிடம் கோரிக்கை

மோசடி செய்பவர்களால் எளிதில் ஏமாற்றப்படலாம் என்பதால், பயண ஆவணங்களை செய்து கொள்வதற்காக முகவர்களிடம் பெரும் தொகையை செலுத்தும் போது அவதானமாக இருக்குமாறு குடிவரவு அதிகாரிகள் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போலி விசா தொடர்பில் பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை | Person Arrested In Katunayake Fake Visa

ஒரு பயணி தனது விசா அல்லது வேறு ஏதேனும் பயண ஆவணத்தின் நம்பகத்தன்மை குறித்து சந்தேகம் கொண்டால், அவர்கள் செல்ல விரும்பும் நாட்டின் அந்தந்த தூதரகம் அல்லது வெளிநாட்டு தூதரகத்துடன் அதைச் சரிபார்க்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.  

அதிகாரிகளால் விசாரணை

போலி இத்தாலிய விசாவுடன் சென்ற பயணி ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து அதிகாரிகளால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலி விசா தொடர்பில் பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை | Person Arrested In Katunayake Fake Visa

அதன்படி, கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று (28) விமான நிலையத்தின் (BIA) புறப்படும் முனையத்தில் வைத்து குறித்த சந்தேகநபர் அதிகாரிகளால் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குறித்த பயணி, மஸ்கட் நோக்கிச் செல்லும் WY-372 ஓமன் எயர் விமானத்தில் செல்வதற்காக பதிவு செய்திருந்த வேளை அவரிடம் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

ஒன்லைனில் பண முதலீடு செய்வதாக பாரிய மோசடி

ஒன்லைனில் பண முதலீடு செய்வதாக பாரிய மோசடி


கடவுச்சீட்டில் போலி விசா

அங்கு அவரது கடவுச்சீட்டு சோதனைக்குட்படுத்தப்பட்டபோது அவரது விசா போலியானது எனத் தெரியவந்துள்ளது.

போலி விசா தொடர்பில் பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை | Person Arrested In Katunayake Fake Visa

இதனைத் தொடர்ந்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் பயண முகவர் ஒருவர் அவருக்கு விசா ஏற்பாடு செய்ததாகவும், அவர் சேவைகளுக்காக 1 மில்லியனுக்கும் அதிகமான பணம் செலுத்தியதாகவும் கூறியிருந்தார்.

தனது கடவுச்சீட்டில் போலி விசா இருப்பது தெரியாமல் இருந்த பயணி மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலையத்திலுள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்களக் கிளையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையிலேயே, போலி வெளிநாட்டு விசாக்கள் ஏற்பாடு செய்யும் போலி பயண முகவர்களிடம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு குடிவரவு அதிகாரிகள் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கையில் முடங்கவுள்ள சமூக வலைத்தளங்கள்: ஹிருணிகா எச்சரிக்கை - செய்திகளின் தொகுப்பு

இலங்கையில் முடங்கவுள்ள சமூக வலைத்தளங்கள்: ஹிருணிகா எச்சரிக்கை - செய்திகளின் தொகுப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்

கரவெட்டி, கலிஃபோர்னியா, United States

15 Feb, 2026
கண்ணீர் அஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி, Toronto, Canada

14 Feb, 2026
நன்றி நவிலல்

தொல்புரம், Drancy, France

18 Jan, 2026
நன்றி நவிலல்

நவாலி, மட்டுவில் தெற்கு, Toronto, Canada, Ajax, Canada

19 Jan, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் மேற்கு, கொக்குவில், London, United Kingdom

20 Jan, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

12 Feb, 2026
மரண அறிவித்தல்

அல்லாரை, சாவகச்சேரி

16 Feb, 2026
மரண அறிவித்தல்

தச்சன்தோப்பு, கொழும்பு

15 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சுழிபுரம், Jaffna, Toronto, Canada

17 Feb, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Heathrow, United Kingdom

18 Feb, 2025
நன்றி நவிலல்

வன்னிவிளாங்குளம், சென்னை, India, Zürich, Switzerland

14 Jan, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், மானிப்பாய், மட்டக்களப்பு, தெஹிவளை

16 Feb, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெளுக்குளம், Harrow, United Kingdom

16 Feb, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் கிழக்கு, Rorschach, Switzerland

19 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
அகாலமரணம்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி, கனடா, Canada

16 Feb, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

18 Feb, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, கொழும்பு 6

27 Feb, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், கொழும்பு

15 Jan, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Paris, France

07 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US