இலங்கை – தாய்லாந்துக்கிடையிலான விமான சேவைக்கு அமைச்சரவை அனுமதி
இலங்கை அரசுக்கும் தாய்லாந்து அரசுக்கும் இடையிலான இருதரப்பு விமானப் போக்குவரத்து ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இது தொடர்பில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போது அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் , இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான இருதரப்பு விமான சேவை ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதற்கான அங்கீகாரம் கடந்த அமைச்சரவை கூட்டத்தில் கிடைத்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சட்டமா அதிபரின் அனுமதி
இதன்படி தாய்லாந்து தரப்பில் முன்வைக்கப்பட்ட திருத்தத்திற்கு சட்டமா அதிபரின் அனுமதியும் வெளிவிவகார அமைச்சின் உடன்பாடும் கிடைத்துள்ளது.
அத்தோடு, இரு நாடுகளுக்கும் இடையிலான உத்தேச இருதரப்பு விமான சேவை ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 2ஆம் நாள் - திருவிழா





என் குழந்தைகளுக்கு தந்தை இல்லாமல் இருக்கலாம்... 40 வயதில் கர்ப்பமான நடிகை! வைரலாகும் நெகிழ்சி பதிவு Manithan

தயவுசெய்து இந்த சீரியலை முடித்துவிடுங்கள், கதறும் சன் டிவி சீரியல் ரசிகர்கள்... அப்படி என்ன தொடர் Cineulagam

திருமண மண்டபத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளிவந்தது.. ஷாக்கில் குடும்பம், சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam
