தேசிய மக்கள் சக்திக்கு அதிக ஆதரவு
கடந்த ஆண்டு(2023) டிசம்பரில் தேசிய மக்கள் சக்திக்கு ஏனைய கட்சிகளை விட அதிகளவு ஆதரவு காணப்பட்டமை கருத்துக்கணிப்பொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
இன்ஸ்டியுட் ஒவ்ஹெல்த் பொலிசி என்ற நிறுவனம் தேர்தலில் வாக்களிக்கும் நோக்கம் குறித்து வாக்களிக்க தகுதிபெற்றவர்கள் மத்தியில் மேற்கொண்ட கருத்துக்கணிப்பின் மூலம் குறித்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த கருத்துக்கணிப்பின்படி தேசிய மக்கள் சக்திக்கு 39 வீதமானவர்கள் தங்கள் ஆதரவை வெளியிட்டுள்ளனர்.
தமிழரசுக் கட்சிக்கு ஆதரவு
ஐக்கிய மக்கள்சக்திக்கு 27 வீதமானவர்களும், ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்கவின் ஐக்கியதேசிய கட்சியிக்கு ஆறுவீத ஆதரவும் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவிற்கு பத்து வீத ஆதரவும் காணப்படுவதை கருத்துக்கணிப்பு வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை தமிழரசுக்கட்சிக்கு மூன்று வீதமானவர்கள் தங்கள் ஆதரவை வெளியிட்டுள்ளனர். தேசிய மக்கள் சக்திக்கான ஆதரவு 2022 முதல் அதிகரித்து வருவதை இந்த கருத்துக்கணிப்பு வெளிப்படுத்துகிறது.
IHP's updated SLOTS MRP model estimates the NPP/JVP held a 12% lead in GE voting intent amongst all adults in Dec '23
— Institute for Health Policy (@ihplk) January 29, 2024
NPP/JVP 39% (-1 from Nov)
SJB 27% (+1)
SLPP 10% (+1)
UNP 6% (=)
ITAK 3% (-1), SLMC 3% (=), CWC (=), Others (=)https://t.co/tKr097qRfl pic.twitter.com/y5aoku37AU
இதன்படி ஐக்கிய மக்கள் சக்தியும் தனது ஆதரவை அதிகரித்துள்ளது. ஆனால் மந்தகதியில் இந்த அதிகரிப்பு காணப்படுகின்றது என கருத்துக்கணிப்பினை மேற்கொண்ட அமைப்பு தெரிவித்துள்ளது.
அத்தோடு, 2022 முதல் ஐக்கியமக்கள் சக்தி இரண்டாம் இடத்தில் காணப்படுகின்றது. டிசம்பர் 2023 கருத்துக்கணிப்புகள் ஐக்கிய தேசிய கட்சிக்கான ஆதரவு தொடர்ந்தும் வீழ்ச்சியடைவதை காண்பிக்கின்றன எனவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |